Happy Life...Healthy Life....

Happy Life...Healthy Life....
Improve Memory Health and Celebrate Life...

Happy Life...Healthy Life....

Happy Life...Healthy Life....
Improve Memory Health and Celebrate Life...

Maramvalarpoom MalaiPeruvoom

Maramvalarpoom MalaiPeruvoom
Importance of Tree

Thursday, November 14, 2013

சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!

உடலில் இரத்தத்தை சுத்திகரிப்பதில் சிறுநீரகம் முக்கிய பங்கினை வகிக்கிறது. இத்தகைய சிறுநீரகத்தின் செயல்பாடு கற்கள் உண்டாவதால் தடைபடுகிறது. இந்த கற்கள் உருவாவதற்கு ஒருசில கெமிக்கல்களான யூரிக் ஆசிட், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் ஆக்ஸாலிக் ஆசிட் போன்றவை திரள்வதால் உண்டாகின்றன.


இத்தகைய கெமிக்கல்கள் சேர்வதற்கு காரணம் அதிகப்படியான வைட்டமின் டி எடுத்துக் கொள்வது, கனிமங்களின் குறைபாடு, உடல் வறட்சி, முறையற்ற உணவுமுறை மற்றும் பல. சிறுநீரக கற்கள் உருவானால் கடுமையான வலி ஏற்படும். இந்த சிறுநீரக கற்கள் ஏற்பட்டால் அடிக்கடி அல்லது வலியுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவது, குமட்டல், வாந்தி மற்றும் அசாதாரணமாக வியர்ப்பது போன்றவை அறிகுறிகளாக இருக்கும்.

இவ்வாறு உருவாகும் சிறுநீர் கற்களை இயற்கை முறையில் கூட எளிமையாக வெளியேற்றலாம். இப்போது அந்த சிறுநீர் கற்களை வெளியேற்ற உதவும் சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.

எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் ஆலிவ் ஆயில் 

ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து 1/2 கப் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். பின் அரை மணிநேரம் கழித்து, 0,5 அவுண்ஸ் எலுமிச்சை சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து 1/2 கப் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.

காராமணி 

காராமணியை 6 மணிநேரம் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த நீரை வடிகட்டி, குளிர வைத்து குடித்து வந்தால், சிறுநீரக கற்களால் உண்டாகும் வலி குறைந்து, கற்களும் கரைந்துவிடும்.

மாதுளை ஜூஸ்
மாதுளையை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் சீக்கிரம் கரைந்துவிடும்.

செலரி (Celery) 

சிறுநீரக கற்களின் அறிகுறிகள் தென்பட்டால், செலரி கீரையை உட்கொண்டு வந்தால், சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கலாம். மேலும் இது சிறுநீரக கற்கள் இருந்தாலும் கரைத்துவிடும்.

துளசி

துளசி டீயை அதிகம் குடித்து வர, சிறுநீரக கற்கள் கரையும்.

தர்பூசணி 

தர்பூசணியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. மேலும் இதில் நீர்ச்சத்து அதிகம் இருக்கிறது. எனவே இதனை சாப்பிட்டால், சிறுநீரக கற்களில் இருந்து விடுபடலாம்.

திராட்சை 

திராட்சையில் பொட்டாசியம் மற்றும் சோடியம் குளோரைடு அதிகம் இருப்பதால், இதனை உட்கொண்டால், சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.

தண்ணீர்... 

போதிய தண்ணீர் குடிக்காமல் இருந்தால், உடலில் வறட்சி ஏற்பட்டு, சிறுநீரகத்தால் இரத்தத்தை சுத்திகரிக்க முடியாமல் போய்விடும். எனவே தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடித்து வந்தால், அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதோடு, சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.